Thursday, June 16, 2005

முயற்சி கதை - 3

ராபர்ட் த ப்ரூஸ்-I

லாக்மாபென் (Lochmaben) கோட்டையில் 1274 ஆம் ஆண்டு பிறந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன் (Knight). 1306 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின்(Scotland) மன்னனாக முடிசூட்டப்பட்டான். அன்று முதல் அண்டை நாட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து (English) ஸ்காட்லாந்தின் சுதந்திரதிற்காக அரும்பாடுபட்டான். இதற்காக பல போர்கள் புரிய நேரிட்டது.

மற்றொருமுறை போரின் போது தோற்று ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு வழியாக சிறு குகை ஒன்றை கண்டுபிடித்து மூன்று மாதங்களாக ஒளிந்து கொண்டிருந்தான். மிகவும் மனமுடைந்து வாழ்க்கையின் எல்லையை அடைந்தது போலிருந்தது அவனுக்கு. அந்த நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறி திரும்ப வராமல் இருக்கலாம் என்ற எண்ணம் மேலொங்கியிருந்தது.

சிறிது நேரம் காத்திருந்தபோது அவனுடைய கவனம் ஒரு சிலந்தியின்பால் திரும்பியது. அந்த சிலந்தி ஒரு வலை பின்ன முயற்சித்துக்கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் பல முறை கீழெ விழுந்து மறுபடியும் மறுபடியும் அது வலையை பின்னி முடிக்கும்வரை முயற்சியை கைவிடாது உழைத்தது! இந்த சிலந்தியின் செயல் அவனை மிகவும் பாதித்தது.

அன்று அவன் குகையிலிருந்து வெளிவந்து தம் வீரர்களிடம் முழங்கிய வாசகம் இன்னும் (சுதந்திரம் பெற்ற!) ஸ்காட்லாந்து மக்களின் நீங்கா நினைவுகள் ஆகும்.

“If at first you don’t succeed, try try and try again”

"முதன்முறை வெற்றிபெறவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செய்"

Monday, June 13, 2005

முயற்சியின் எதிரிகள்

முயற்சியொட முதல் எதிரி - சோம்பேறித்தனம். சரியா? பல பேர் இதை ஒத்துக்குவாங்கன்னு நான் நெனைக்கிறேன். ஆனாலும் யோசனை பண்ணினா இன்னும் சில விஷயங்கள் தெரிய வருது.


முயற்சியொட எதிரிகளை மொதல்ல வரிசைப்படுத்திட்டு அப்புறமா கொஞ்சம் விரிவா எழுதணும்னு ஆசை..

கொஞ்சம் சிந்தனையும் படிப்பும் இப்பொ அவசியமா இருக்கு....