Wednesday, October 01, 2008

விடா முயற்சியா? வெட்டி முயற்சியா?

வாழ்க்கை இப்டியே போயிடுமா?

Friday, January 06, 2006

முயற்சி கதை - 4 (வாய்ப்புகளை உருவாக்குதல்)

விரிவுரையாளர் சார்லஸ் ஹாப்ஸ் அடிக்கடி சொல்லும் ஒரு பெண்ணின் கதை!

அந்தப்பெண் சமையலறை (scullery) வேலை செய்பவர். ஒரு நாள் அந்தப்பெண் ஹாப்ஸின் உரையை கேட்க நேர்ந்தது. அவரை சந்திக்கவும் செய்தாள். அப்போது பாராட்டுதலுக்காக, "நீங்கள் கொடுத்துவைத்தவர், உங்களுக்கு இந்த வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது!", அருமையாக செய்கிறீர்கள், என்றாள். ஹாப்ஸ், "பெண்ணே, உனக்கு வாய்ப்பு கிடைத்ததில்லையா?" என்று வினவினார். இல்லை! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தில்லை என்றாள் அவள். "நீ என்ன செய்கிறாய்"? - ஹாப்ஸ். "இந்த கடையில் உருளைகிழங்கும், வெங்காயமும் உறிக்கிறேன்", என்றாள்.

"எவ்வளவு நாட்களாக செய்கிறாய்?"

“பதினைந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது!”

"எங்கே உட்கார்ந்து வேலை செய்கிறாய்?"

அந்த கடையில் கடைசி படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு பல நேரங்களில் வேலை செய்வேன். "ஏன் இந்த கேள்வி?" ஆச்சரியமுற்றாள்!

"அப்போது உன் கால்களுக்கடியில் என்ன இருந்தது?"

"தரைதான். வேறென்ன? அருமையான கற்களால் கட்டப்பட்ட தரை!"

"பெண்ணே, உனக்கு நான் ஒரு வேலை தருகிறேன். செய்வாயா?"

"ம்ம். சொல்லுங்கள், முயற்சிக்கிறேன்."

"உன் காலுக்கடியில் கண்ட கற்களைப்பற்றி அறிந்து, உனக்குத்தெரியவந்த அனைத்து விவரங்களையும் எனக்கு எழுது. கண்டிப்பாக எழுத வேண்டும்" என்று சிறு அன்புக்கட்டளையிட்டார், சிரித்துக்கொண்டே!

மறுநாள் வெங்காயம் உறிக்கும்போது, தரையை பார்த்துக்கொண்டே இருந்தாள். பின்னர், அதைப்பொல் ஒரு உடைந்த கல்லை பரணிலிருந்து எடுத்து பக்கத்திலிருந்த கல் தொழிற்சாலைக்கு சென்று, இந்த கல்லை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்றாள். அது எப்படி செய்யப்பட்டது என்று அங்கு தெரிந்து கொண்டாள்.

அதனை மட்டும் எழுதினால் நன்றாக இருக்காதென்று, கொஞ்ச நேரம் ஒதுக்கி, அருகாமையிலுருந்த நூலகத்திற்கு சென்றாள். பல புத்தகங்களிலிருந்து சிறு குறிப்புகள் அந்த கல்லைப்பற்றி தெரிந்துகொண்டாள்! கல் செய்யும் முறையிலிருந்து, கல் தோன்றிய வரலாறு வரை தெரிந்துகொள்ள அவளுடைய ஆவல் விரிவடைந்தது! கற்பனை வளர்ந்தது. ஒவ்வொரு முறையும் நூலகம் சென்று குறிப்புகள் எடுத்தாள்! இங்கிலாந்தில் 120 வகை கற்கள் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்று அனைத்தும் தெரிய வந்தது!

இப்போது இதனை ஹாப்ஸுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்பினாள்! 36 பக்க கடிதம் ஒன்றை அவருக்கு எழுதினாள்.

சில நாட்கள் கழித்து ஹாப்ஸிடமிருந்து கடிதம் வந்தது - காசோலயுடனும் அடுத்த சிறு வேலையுடனும்! ஆச்சரியப்பட்டாள். ஹாப்ஸ் அப்பெண்ணின் கற்களைப்பற்றிய தொகுப்பை சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அதில் கிடைத்த பணத்தை அப்பெண்ணுக்கு காசோலையாக அனுப்பியிருந்தார். இப்போது அந்த சமையலறையில் இருக்கும் ஏதாவதொரு உயிரினத்தைப்பற்றி தெரிந்தவைகளை தொகுத்து தரமுடியுமா? என வினவியிருந்தார்.

அவளுக்கு சமையலறை உயிரினம் என்று உடனே தொன்றியது எறும்புதான்! இப்பொது முந்தைய முறையைவிட அதனைப்பற்றி அறியும் ஆர்வம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. பல வகையான் எறும்புகளைப்பற்றி ஆராய்ந்தாள். ஊசிமுனையில் நிற்கக்கூடிய சிறு எறும்புகளையும், மனிதக்கால் அளவு உள்ள பெரிய எறும்புகளையும் பற்றி தெரிந்துகொண்டாள். எறும்பு பண்ணை ஒன்றையே உருவாக்கினாள், ஆராய்வதற்காக!

கடைசியாக 350 பக்கங்கள் கொண்ட எறும்பு பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டாள். அவள் இறப்பதற்கு முன் நினைத்தறியாத பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததோடல்லாமல், கற்பனை செய்யாத பல அநுபவங்களையும் பெற்றாள்.

இந்தப்பெண்தான் ஒரு முறை தனக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று புலம்பியவள்!

சிலர் வாய்ப்பு தன் வீட்டு கதவை தட்டும் என்று நினைத்து காத்திருக்கிறார்கள். இங்கே ஒரு உதாரணம் காட்டப்பட்டது. வாய்ப்பு தன் கதவை தட்ட வேண்டும் என்று காத்திருக்கப்போகிறீர்களா? அல்லது உங்கள் வாய்ப்பினை நீங்கள் உருவாக்கிக்கொள்ளப்போகிறீர்களா?

Thursday, June 16, 2005

முயற்சி கதை - 3

ராபர்ட் த ப்ரூஸ்-I

லாக்மாபென் (Lochmaben) கோட்டையில் 1274 ஆம் ஆண்டு பிறந்தான். அவன் ஒரு மிகச்சிறந்த போர்வீரன் (Knight). 1306 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின்(Scotland) மன்னனாக முடிசூட்டப்பட்டான். அன்று முதல் அண்டை நாட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து (English) ஸ்காட்லாந்தின் சுதந்திரதிற்காக அரும்பாடுபட்டான். இதற்காக பல போர்கள் புரிய நேரிட்டது.

மற்றொருமுறை போரின் போது தோற்று ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒரு வழியாக சிறு குகை ஒன்றை கண்டுபிடித்து மூன்று மாதங்களாக ஒளிந்து கொண்டிருந்தான். மிகவும் மனமுடைந்து வாழ்க்கையின் எல்லையை அடைந்தது போலிருந்தது அவனுக்கு. அந்த நாட்டைவிட்டு எப்படியாவது வெளியேறி திரும்ப வராமல் இருக்கலாம் என்ற எண்ணம் மேலொங்கியிருந்தது.

சிறிது நேரம் காத்திருந்தபோது அவனுடைய கவனம் ஒரு சிலந்தியின்பால் திரும்பியது. அந்த சிலந்தி ஒரு வலை பின்ன முயற்சித்துக்கொண்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் பல முறை கீழெ விழுந்து மறுபடியும் மறுபடியும் அது வலையை பின்னி முடிக்கும்வரை முயற்சியை கைவிடாது உழைத்தது! இந்த சிலந்தியின் செயல் அவனை மிகவும் பாதித்தது.

அன்று அவன் குகையிலிருந்து வெளிவந்து தம் வீரர்களிடம் முழங்கிய வாசகம் இன்னும் (சுதந்திரம் பெற்ற!) ஸ்காட்லாந்து மக்களின் நீங்கா நினைவுகள் ஆகும்.

“If at first you don’t succeed, try try and try again”

"முதன்முறை வெற்றிபெறவில்லை என்றால் தொடர்ந்து முயற்சி செய்"

Monday, June 13, 2005

முயற்சியின் எதிரிகள்

முயற்சியொட முதல் எதிரி - சோம்பேறித்தனம். சரியா? பல பேர் இதை ஒத்துக்குவாங்கன்னு நான் நெனைக்கிறேன். ஆனாலும் யோசனை பண்ணினா இன்னும் சில விஷயங்கள் தெரிய வருது.


முயற்சியொட எதிரிகளை மொதல்ல வரிசைப்படுத்திட்டு அப்புறமா கொஞ்சம் விரிவா எழுதணும்னு ஆசை..

கொஞ்சம் சிந்தனையும் படிப்பும் இப்பொ அவசியமா இருக்கு....

Tuesday, May 31, 2005

முயற்சி கதை - 2

ரெண்டு தவளைங்க குதிச்சு குதிச்சு பொய்க்கிட்டு இருந்தது. அப்படியே விளையாட்டா தாவும்போது ரெண்டு தவளையும் ஒரு தயிர் பானைக்குள்ள விழுந்துடுச்சுங்க.

ஒரு அஞ்சு பத்து நிமிஷம் ரெண்டு தவளையும் பானைக்குள்ளேயிருந்து வெளிய குதிக்க முயற்சி செஞ்சுதுங்க. ஆனாலும் உடனே அது முடியலை. ஒரு தவளை நம்பிக்கை இழக்க ஆரம்பிச்சு நீந்துவதை நிறுத்திருச்சு. தயிருக்குள்ள மூழ்கிப்போச்சு!

ரெண்டாவது தவளை முயற்சிய கைவிடலை. எப்படியும் வெளியெ போயிடலாம்னு நீந்திக்கிட்டெ இருந்தது. அது கொஞ்சம் மூச்சு வாங்கி ஓய்வு எடுக்கணும்னு நெனைச்ச சமயத்துல ஒரு ஆச்சரியம் நடந்தது.

இவ்ளொ நேரமா நீந்துனதால வெண்ணெய் திரண்டு மிதந்துக்கிட்டு இருந்தது! அது மேல் ஏறி உக்காந்துகிச்சு. அப்புறமா, அங்கெயிருந்து ஒரே தாவுல வெளிய குதிச்சிடுச்சி!

முயற்சிதான் காரணம்!!

Friday, May 27, 2005

முயற்சி கதை - 1

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு வேலை செஞ்ச ஒரு தளபதிக்கு வயசாயிடுச்சு. வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. வித்தியாசமான ஒரு தேர்வு செய்யணும்னு நெனைச்சாரு. தளபதி தேர்வை கேள்விப்பட்டு பல பேர் போட்டி பொட முன் வந்தாங்க.

ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ஒரு சின்ன விளக்கம் தந்தாரு. அதாவது - இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலொகத்துல செஞ்சது. இதுவரைக்கும் யாராலெயும் அதை திறக்க முடியலை. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் பேசினாரு. அந்த கதவை திறக்கிறவங்களுக்கு

இதை கேட்ட அப்புறம் கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! இது என்ன? யாராலயும் திறக்க முடியாததில்ல ராஜா செய்ய சொல்றாரு. இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருக்காங்க. அவங்களாலயும் திறக்கமுடியாதது இல்லயா இது? நம்மால ஆகாது!! அப்டின்னு கிளம்பிட்டாங்க.

ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுக்கிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறக்கரவங்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறதா ராஜா எல்லார்கிட்டயும் சொன்னாரு. கதவை பார்த்த அப்புறம் நெறைய பேர் கஷ்டம்தான் என்ன பண்றது. எப்டி திறக்கறதுன்னு பக்கத்துல இருந்தவங்க கிட்ட பேசிக்கிட்டாங்க!

ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!

ராஜா அவனையே பாராட்டி தளபதி ஆகிற தகுதி உனக்குத்தான் இருக்கு. பல பேர் சொல்லுறதுனாலயும், ராஜா சொல்றாருங்கறதாலயும் முயற்சி செய்யாம இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!

முயற்சி செய்யற ஒரு வீரன் தான் என் மக்களுக்கு தளபதியா இருக்கணும் அப்டின்னாரு.

முயற்சிதான் காரணம்!!

Thursday, April 28, 2005

நாந்தான் First!

மனிதன் தோன்றுவதே “முயற்சியிலிருந்து” என்பதை யாரும் மறுக்கமுடியாத சான்று: லக்ஷக்கணக்கான விந்தணுக்கள் கருமுட்டையை நீந்திச்சென்றடையும்பொது, அதிலிருந்து ஒன்று மட்டுமெ கருமுட்டையினுட்புக வெற்றியடைகிறது.

மனிதனுடைய பிறப்பு முயற்சியிலிருந்து ஆரம்பிக்கின்றது!

WHO கணக்கெடுப்பின்படி(1992) உலகத்தின் சராசரி விந்தணு எண்ணிக்கை (Sperm Count) 60 மில்லியன்/மி.லி. !

So, இத்தனை மில்லியன்கள் நீந்தியும் நாந்தான் முதலில் புகுந்தேன், நாந்தான் பிறந்தேன்!!

முயற்சியே மனிதனை உருவாக்குகிறது!

முதல் முயற்சி

அவைக்கு வணக்கம்.

BLOG எழுத நினைத்து, செயல்படுத்துவது - என் முதல் முயற்சி. "முயற்சி" பற்றிய சில/பல தொகுப்புகளை விரைவில் இந்த "BLOG" கில் கொடுக்க நினைக்கிறேன்.

அன்புடன்
தாசரதி