Friday, May 27, 2005

முயற்சி கதை - 1

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு வேலை செஞ்ச ஒரு தளபதிக்கு வயசாயிடுச்சு. வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு. வித்தியாசமான ஒரு தேர்வு செய்யணும்னு நெனைச்சாரு. தளபதி தேர்வை கேள்விப்பட்டு பல பேர் போட்டி பொட முன் வந்தாங்க.

ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ஒரு சின்ன விளக்கம் தந்தாரு. அதாவது - இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலொகத்துல செஞ்சது. இதுவரைக்கும் யாராலெயும் அதை திறக்க முடியலை. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் பேசினாரு. அந்த கதவை திறக்கிறவங்களுக்கு

இதை கேட்ட அப்புறம் கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! இது என்ன? யாராலயும் திறக்க முடியாததில்ல ராஜா செய்ய சொல்றாரு. இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருக்காங்க. அவங்களாலயும் திறக்கமுடியாதது இல்லயா இது? நம்மால ஆகாது!! அப்டின்னு கிளம்பிட்டாங்க.

ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுக்கிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறக்கரவங்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறதா ராஜா எல்லார்கிட்டயும் சொன்னாரு. கதவை பார்த்த அப்புறம் நெறைய பேர் கஷ்டம்தான் என்ன பண்றது. எப்டி திறக்கறதுன்னு பக்கத்துல இருந்தவங்க கிட்ட பேசிக்கிட்டாங்க!

ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!

ராஜா அவனையே பாராட்டி தளபதி ஆகிற தகுதி உனக்குத்தான் இருக்கு. பல பேர் சொல்லுறதுனாலயும், ராஜா சொல்றாருங்கறதாலயும் முயற்சி செய்யாம இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!

முயற்சி செய்யற ஒரு வீரன் தான் என் மக்களுக்கு தளபதியா இருக்கணும் அப்டின்னாரு.

முயற்சிதான் காரணம்!!

4 comments:

Anonymous said...

ஆரம்பம் மிக நன்றாக உள்ளது. இப்படிக்கு, பாலகிருஷ்ணன் செ.

வீ. எம் said...

good one !

microtech said...

I LIKE THIS STORY BY R.SUTHA

microtech said...

SUPER STORY